ETV Bharat / state

குட்கா முறைகேடு வழக்கு - திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம்!

author img

By

Published : Feb 17, 2023, 6:51 PM IST

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tn
tn

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் குட்கா கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கிடங்கில் வைத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016 ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதையடுத்து 11 பேருக்கு எதிராக 2022ஆம் ஆண்டு நவம்பரில் சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால், அதனை திருத்தம் செய்து, உரிய ஆதாரங்களை இணைத்து முழுமையாக தாக்கல் செய்ய சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழை திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: இந்து சமயத்திற்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.