ETV Bharat / state

இளங்கலை மருத்துவ இடங்கள் நிரப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மத்திய அரசின் இளங்கலை மருத்துவ இடங்களை நிரப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இளங்கலை மருத்துவ இடங்களை நிரப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:25 PM IST

Updated : Oct 26, 2023, 10:28 PM IST

சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தமிழ்நாடு கம்பென்டியம் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ் எனும் பன்னாட்டு மருத்துவ ஆய்விதழ், நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் கையேடு மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான மாவட்ட உள்ளுறை பயிற்சித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல் ஆகியவற்றை வெளியிடும் விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு மத்திய அரசின் கீழ் 86 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், இல்லையென்றால் இதனை மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்கின்ற வகையில் கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

அதற்கு இதுவரை பதில்கள் கிடைக்கவில்லை, துறையின் செயலாளர் அவர்கள் இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலைப் பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடருவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தொற்று நோய் சிகிச்சையின் போது எதிர்கொள்ளும் பல சவால்களை அறிந்துக் கொண்டு அதற்கான உரிய சிகிச்சையை அளித்திட இப்பதிப்பு உதவியாக இருக்கும். மேலும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான மாவட்ட உள்ளிருப்பு பயிற்சி திட்டத்திற்கான மாவட்ட மருத்துவமனைகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி கட்டிடம் விரைவில் அமையவுள்ளது. அதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது, விரைவில் ஒப்பந்தம் போடப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மதம், சாதி ரீதியாக பிரிந்துள்ள நாம் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைக்க வேண்டும்' - ஆளுநர் ஆர்.என்.ரவி

Last Updated : Oct 26, 2023, 10:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.