ETV Bharat / state

நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் - நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாட்டில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும்

author img

By

Published : May 30, 2022, 10:49 PM IST

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ’தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013ஆம் ஆண்டு அம்மா உணவகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் அம்மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கும், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் வகையில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

போக்குவரத்து அல்லாத வாகனங்களில் ஓட்டுநர்கள் குறைந்த ஊதியம் பெறுவதாகவும், சாலையோர உணவகங்களில் அதிக விலை கொடுத்தாலும், அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிடும்படியும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: 'குக் வித் கோமாளி' பார்த்தால் குழந்தை பிறக்குமா? - கதறவிட்ட நெட்டிசன்கள் - கொதித்தெழுந்த வெங்கடேஷ் பட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.