சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிவதால், கரோனா பரவக் கூடும் என, அதனை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் கடந்த நவம்பர் ஒன்று அன்று மண்ணடியில் முககவசம் அணியாமல் வந்த நபரை மடக்கி பிடித்து, அபராத தொகை செலுத்துமாறு கேட்டபோது, அந்த நபர் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியில் மாநில செயலாளர் எனவும், வாகனத்து மீது கை வைத்தால் பிரச்சனை ஆகிவிடும் என்றும் கூறி காவல்துறையினரை மிரட்டினார்.
காவலர்களை மிரட்டியவர் மீது வழக்கு
அதனை காவல்துறையினர் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போது, நானும் வீடியோ எடுப்பேன் எனக்கூறி தனது செல்போனில் பொதுமக்களிடம் 100, 200 என காவல்துறையினர் பணம் பறிப்பதாக பேசி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் டைகர் அலி என்பதும், எஸ்டிபிஐ கட்சியில் வர்த்தகர் பிரிவு செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506(1)- மிரட்டல், மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.