ETV Bharat / state

டெண்டர் முறைகேடு - முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு! - sp velumani raid issue

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீதும் லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்துள்ளதுள்ளனர்.

டெண்டர் முறைகேடு
டெண்டர் முறைகேடு
author img

By

Published : Sep 5, 2021, 10:46 PM IST

சென்னை : முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, சென்னை மாநகராட்சி, கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

எஸ் பி வேலுமணிக்கு தொடர்பான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, செப்டம்பர் 1ஆம் தேதி எஸ் பி வேலுமணிக்கு தொடர்பான வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்துள்ளனர்.

பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் 15 கோடி ரூபாய் டென்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 2020 முதல் 2021 காலகட்டங்களில் ஒதுக்கப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு அரசு ஒப்பந்ததாரர்கள் இடம் ஆதாயம் பெரும் வகையில், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் முன்தொகை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பவுன்ராஜ் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது உறுதியானது.

இதை அடிப்படையாக வைத்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஏற்கனவே கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் அதை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ் பி வேலுமணி டெண்டர் முறைகேடு

கோவை முனிசிபல் கார்ப்பரேஷனில் 346 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்த நிலையில், டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி டெண்டர் முறைகேட்டில் முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 15 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு மட்டும் அல்லாமல், வால்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார், பவுன்ராஜ் மீது அளித்த புகாரில், முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், நகராட்சி மேலாளர் நஞ்சுண்டன், ஒப்பந்ததாரர் மணிகண்டன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பொது மக்கள் பணம் 35 லட்சத்து 78 ஆயிரத்து 505 மோசடி செய்து நகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கு முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சேலம் அருகே 6 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா பறிமுதல்: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.