ETV Bharat / state

சென்னையில் முகக்கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு! - Interview with Corporation Commissioner Kagandeep Singh Bedi

சென்னையில் கடந்த 3 நாள்களில் முகக்கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முகக்கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Jan 6, 2022, 9:19 AM IST

சென்னையின் அம்மா மாளிகையில் திருமண மண்டபம், ஹோட்டல் உரிமையாளர்களுடன் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று (ஜன.5) ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், "திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணம் குறித்த விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 100 நபர்களுக்கு மிகாமல் திருமணம் நடத்த வேண்டும். அதே போன்று உணவகங்களில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ள கரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கடந்த 3 நாள்களில் முகக்கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.நகரில் உள்ள கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூட தடை விதித்துள்ளதை பின்பற்றுகிறார்களா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாதோர் மீது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகின்றன" என்றார்.

அதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், "சென்னை மாநகராட்சி சார்பாக தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் தாங்களாக முன் வந்து முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பாதிப்பு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

உடல்நிலை சரியில்லாத நபர்கள் அருகில் உள்ள மையங்களில் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேரில் செல்ல முடியாதோர் 25384520 அல்லது 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் வீட்டிற்கே வந்து கரோனா சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4,862 பேருக்குக் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.