ETV Bharat / state

அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிப்பா...?

சென்னை: அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

author img

By

Published : Aug 13, 2019, 1:06 PM IST

chennai hc

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து இதுவரை சுமார் 71 லட்சம் பக்தர்கள் நீண்ட காத்திருப்புக்கு பின் தரிசனம் செய்தனர்.

மேலும், கூட்ட நெரிசல் காரணமாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெரும்பாலானோர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதியில் திரும்புகின்றனர். இதனையடுத்து, வழக்கறிஞர் பிரபாகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதில் ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியை, முதியவர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக மேலும் 48 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி வழக்கை மனுவாக தாக்கல் செய்தால் நாளை (ஆக்.14) விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Intro:Body:அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி ஆகஸ்ட் 17ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு, நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் 48 நாட்கள் முடிவடைய உள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் கடந்த 45 நாட்களில் மட்டும் சுமார் 71 லட்சம் பேர் தமிழகம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கூட்ட நெரிசல் காரணமாக முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெரும்பாலானோர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதியில் திரும்புகின்றனர்.

அதனால், ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் 48 முடியவுள்ள அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியை முதியவர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக மேலும் 48 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் பிரபாகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்ற நீதிபதி ஆதிகேசவலு, வழக்கை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.