ETV Bharat / state

குடிபோதையில் காவலர்களிடம் வாக்குவாதம்: விசிக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு - விசிக வழக்கறிஞர்

குடிபோதையில் காரை ஓட்டிவந்து, காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்

author img

By

Published : Jun 22, 2021, 10:34 AM IST

சென்னை: கொண்டிதோப்பு பத்மநாதன் பாயிண்ட் பகுதியில் காவல் துறையினர் நேற்றிரவு (ஜூன் 21) வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று அதிவேகமாகவும், அருகே செல்லும் வாகனங்களை மோதுவது போலவும் வந்துள்ளது.

இதனைக் கண்ட காவல் துறையினர், அந்தக் காரை நிறுத்தி, கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார் ஓட்டுநர், தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி காவல் துறையினரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமசந்திரன், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அந்நபர் மீது மதுபோதையில் வாகனத்தை ஓட்டுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரது காரைப் பறிமுதல்செய்தனர்.

காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்

மேலும், தகராறில் ஈடுபட்ட நபர் விசிக வழக்கறிஞரான விஸ்வநாதன் என்பது தெரியவந்தது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஸ்வநாதனின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: குடிபோதையில் வனக்காவலர்கள் தகராறு: படம்பிடித்த செய்தியாளரை தாக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.