சென்னை: பல்லாவரம் ஜி.எஸ்.டி.சாலையில் பேருந்து நிலையம் அருகேவுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பல்லாவரம் குறுவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சங்கர் (56). இவர், கடந்த 10 மாதங்களாக இங்கு பணிபுரிந்து வருகிறார்.
இவரது அலுவகத்திற்கு வந்த அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு, 72ஆயிரம் ரூபாயை ஆண்டு வருமானமாக காட்டி சான்றிதழ் ஒன்று கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், வருவாய் ஆய்வாளர் சங்கர், அவர்களது தகுதியை ஆராய்ந்து 84ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானமாக சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் சங்கர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மீது அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பா சாவுக்கு நான் காரணமா? குற்ற உணர்ச்சியில் மகன் தற்கொலை!