ETV Bharat / state

தொழிலதிபரை கடத்திய போலீசாருக்கு எதிரான வழக்கு - சிபிஐக்கு மாற்றம் - Madras High Court

தொழிலதிபரை கடத்தி சிறை வைத்து, ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபரை கடத்திய போலீசாருக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம்

author img

By

Published : Oct 20, 2022, 9:53 AM IST

சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை என்பவரைக் கடத்தியதோடு சிறைப்படுத்தி, ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத் மற்றும் சிவா ஆகியோர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, தொழிலதிபர் ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதேநேரம் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் உள்ளிட்டோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து இந்த மனுக்களை நேற்று (அக்.19) விசாரித்த நீதிபதி இளந்திரையன், “இந்த வழக்கில் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை, துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அவர்களின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால், புலன் விசாரணையில் தலையிட முடியாது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

அதேநேரம், இந்த வழக்கில் மாநில காவல்துறையினர், குறிப்பாக காவல்துறை உயர் அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி சிபிசிஐடி காவல்துறையினருக்கு, இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது. தொடர்ந்து வழக்கை முழுமையாக விசாரித்து ஆறு மாதங்களில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வரதட்சணை புகார் அளித்தவரிடம் லஞ்சம்..பெண் காவல் ஆய்வாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.