சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக, பாஜக மாநில துணை தலைவர் வினோஜ் பி.செல்வம் அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இருபிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினர், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வினோஜ் பி.செல்வம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வினோஜ் தரப்பில் நாளிதழ் செய்தியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தான் ட்விட்டரில் பதிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வினோஜ் பி.செல்வம் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்!