சென்னை: ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென கரும்புகை வெளியேறியது. காரை ஓட்டிவந்தவரும், உடன் வந்தவரும் காரிலிருந்து இறங்கினர். அப்போது காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.
அங்கிருந்த பொதுமக்கள் அருகிலிருந்த பாரத் ஸ்கேன் சென்டரிலிருந்து நீர் கொண்டுவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து அண்ணாசாலை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டிவந்தவர் ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீக். பழைய காரை கடந்த சில மாதங்களுக்கு முன் தான் விலைக்கு வாங்கியுள்ளார்.
கடந்த நான்கு மாதமாக வாகனத்தை இயக்காமல் வைத்திருந்ததால், மெக்கானிக் மூலம் பழுதுபார்க்க ரபீக் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்படிச் செல்லும்போது தான் கரும்புகை உருவாகி திடீரென கார் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்