ETV Bharat / state

மன்னிப்புக்கேட்டபிறகும் தன் கார் மீது பைக்கில் மோதிய நபரை துரத்தி துரத்தி அடிக்கும் உரிமையாளர்! - தாம்பரத்தில் கார் விபத்து

தாம்பரம் பேருந்து நிலையம் முன்பு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை சராமாரியாகத் தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

தன் கார் மீது மோதிய பைக் ஓட்டுநரை துரட்டி துரட்டி அடித்த கார் உரிமையாளர்..!

author img

By

Published : Jun 12, 2022, 3:57 PM IST

Updated : Jun 13, 2022, 3:47 PM IST

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் முன்பு, ஜி.எஸ்.டி. சாலையில் ஜூன் 11ஆம் தேதி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது மோதியது. இதில் காரில் லேசான கீறல்கள் விழுந்தன.

இதனால் ஆத்திரமடைந்த காரின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல், அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தார். மோதிய இளைஞர், 'மன்னித்து விடுங்கள். தெரியாமல் மோதி விட்டேன்..' என மன்னிப்புக்கேட்ட பிறகும் விடாத கார் உரிமையாளர் பேருந்து நிலையத்திற்கு துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கினார்.

ஒரு கட்டத்தில் காரின் உரிமையாளரின் அத்துமீறலைப் பொறுத்துக்கொள்ள முடியாத பொதுமக்கள், காரின் உரிமையாளர் தாக்குவதைத் தட்டிக்கேட்டு, அந்த இளைஞரை அவரிடம் இருந்து மீட்டனர்.

தன் கார் மீது பைக்கில் மோதிய நபரை துரத்தி துரத்தி அடித்த உரிமையாளர்

மேலும், தாக்குதல் நடத்திய காரின் உரிமையாளரை சூழ்ந்துகொண்டு, 'மன்னிப்புக்கேட்ட பிறகு இவ்வாறு தாக்குகின்றீர்களே' எனக் கேள்வி எழுப்பினர். ”காருக்கு சேதமடைந்தால் போலீசில் புகார் அளியுங்கள். காப்பீடு பெற்று கொள்ளுங்கள்” என சிலர் தட்டிக்கேட்டதும், நைஸாக அங்கிருந்து காரின் உரிமையாளர் தப்பிச்சென்றார்.

இதையும் படிங்க: "இளம் ஐஏஎஸ்களுக்கு, பி.சபாநாயகம் ஒரு பல்கலைக்கழகம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Last Updated : Jun 13, 2022, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.