ETV Bharat / state

கோயிலுக்குள் புகுந்த கார் - ஒருவர் காயம் - chennai latest news update

பூந்தமல்லி அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கோயிலுக்குள் கார் புகுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

கோயிலுக்குள் புகுந்த கார்
கோயிலுக்குள் புகுந்த கார்
author img

By

Published : Sep 19, 2021, 8:17 PM IST

சென்னை: திருவள்ளூரை சேர்ந்த பாலகுமார் இன்று காலை கரையான் சாவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இடித்துவிட்டு சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய கோயிலுக்குள் மோதி நின்றது இதில் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

கோயிலுக்குள் படுத்திருந்த ராஜேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த ராஜேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரை ஓட்டி வந்த பாலகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின்போது குடியிருப்புகள் கட்ட வாடகைக்கு விடப்படும் ஏணி வைத்துள்ள கடை, மோட்டார் சைக்கிள், கோயில் ஆகியவை சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ரசீது இருக்கா - கே.சி.வீரமணியை நெருங்கும் மண் பதுக்கல் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.