ETV Bharat / state

வளர்ப்பு யானைகள் நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனு - வளர்ப்பு யானைகள் நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளின் தற்போதைய நிலையை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வளர்ப்பு யானைகள் நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் வழக்கு!
author img

By

Published : Nov 15, 2019, 2:51 PM IST

திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழ்நாடு வனத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய 2016ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “அரசால் அமைக்கப்பட்ட குழுவால் வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால் வளர்ப்பு யானைகளின் நிலையைக் கண்டறிய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, யானைகள் தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க பெல்!

Intro:Body:தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளின் தற்போதைய நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 வளர்ப்பு யானைகள் உள்ளதாக தமிழக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய கடந்த 2016-ம் ஆண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு வளர்ப்பு யானைகளின் உரிமையை முறையாக பராமரிக்கவில்லை என்றும் வளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமண்ட் ரூபின் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வு, யானைகள் தொடர்பான வழக்கு வேறோரு அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.