சென்னை: தாம்பரம் காவல் நிலைய போலீசார் கடப்பேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த இருவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
இருவரும் மேற்குத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (31), விஜய் (22) என்பதும், இவர்கள் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி