சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு பகுதியில் சேலையூர் சரக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகபடும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவரிடம் விசாரணை செய்தபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து, காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் பட்டாக்கத்தி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை கைது செய்து சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த நபர் தாம்பரம் அடுத்தசேலையூர் திருவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மார்டின் (வயது 22) என்பதும் மீது ஏற்கனவே சேலையூர் காவல் நிலையத்தில் நான்கு கஞ்சா வழக்குகளும், மதுரவாயல் காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனம், வீச்சருவாள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற பெண் மீது தாக்குதல்...!