ETV Bharat / state

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாளை இரவு மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்ச்சி!

author img

By

Published : Apr 21, 2020, 1:30 PM IST

சென்னை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வலியுறுத்தி நாளை இரவு நடைபெற உள்ள மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Candlelight event tomorrow night to ensure the safety of doctors

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்களுக்கு தரமான பாதுக்காப்பு கவச உடைகள், முகக்கவசங்கள், தங்கும் வசதிகள், உணவு முதலியவை முறையாக வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

வூஹானில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு கவசங்கள், பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றை போதிய அளவு கொள்முதல் செய்யவில்லை; உற்பத்தியும் செய்யவில்லை. இதன் காரணமாக பல இடங்களில் கரானா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்; கரோனா தொற்றுக்கும் உள்ளாகின்றனர்.

பொது இடங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் தாக்கப்படுகின்றனர். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிகைகளை எடுக்கவில்லை. இதனால் பாதுக்காப்பற்ற சூழல் நிலவுகிறது.

மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மருத்துவமனைகளையும் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவேண்டும். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சமூக நிலைமைகளையும் உருவாக்கிட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கியதால் வீரமரணம் அடைந்த, மருத்துவர்களின் உடல்களைக் கௌரவமான முறையில் எரியூட்டவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியவில்லை.

தமிழ்நாட்டில் மருத்துவர்களான சைமன், லெட்சுமி நாராயண ரெட்டி, ஜெயமோகன் ஆகியோரது உடல்களுக்கு கௌரவமான முறையில் இறுதி நிகழ்ச்சிகள் நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசே காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவர்களை அவர்களது இறப்பிற்குப் பின்பும் அவமானப்படுத்துவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

இதனைத் தடுத்திடவும், காவல் துறை பாதுகாப்புடன், அரசு மரியாதையுடன் அவர்களது இறுதி நிகழ்ச்சிகளை நடத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இதனால் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உள உறுதியும் நம்பிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களைப் பாதுக்காப்பது அவசியம். அவர்களுக்குத் தேவையான பாதுக்காப்பு உடைகள் வழங்க வேண்டும்.

கரோனா தொற்றாமல் இருக்கத் தனிமைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களை பாதுக்காக்கக்கோரி மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி நாளை இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மருத்துவர்களின் சார்பில் நடைபெற உள்ளது.

இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவர்களும் செவிலியரும் சமூக இடைவெளி விட்டு பங்கேற்றிட வேண்டும். மொட்டை மாடிகளிலும் அவரவர் வீட்டு வாயில்களிலும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கு ஏந்தி மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் ஆதரவு தர வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், வெகுமக்கள் அமைப்புகள், சமூக இயக்கங்கள் என அனைவரும் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.