ETV Bharat / state

5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு - 5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

school
school
author img

By

Published : Feb 17, 2020, 11:22 AM IST

Updated : Feb 17, 2020, 1:33 PM IST

11:12 February 17

சென்னை: 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமை திருத்தச்சட்டம் 2019-ன் படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அனுமதியளிக்கப்பட்டது. அதனடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை பொதுத் தேர்வு நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டது.  

ஆனால், இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,  கடந்த 4ஆம் தேதி 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அப்போது 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20ஆம் கல்வியாண்டில் முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக 2019 செப்டம்பர் 13ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.  

இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டு, அதனை அரசு பரிசீலனை செய்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்தார்.  இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், '2020 பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில்,  

"அரசாணை எண் 164 நாள் 2019 செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் 2019-20ஆம் கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதியில் பொதுத் தேர்வு நடத்திட வெளியிட்ட அரசாணையினை ரத்து செய்யப்படுகிறது.  மேலும் ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

Last Updated : Feb 17, 2020, 1:33 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.