ETV Bharat / state

நீட் தேர்வு ரத்து செய்யக் கோரிக்கை: அருணோதயா சங்கங்களின் கூட்டமைப்பு நீதிபதி ஏ.கே. ராஜனுக்கு கடிதம்!

author img

By

Published : Jun 24, 2021, 8:06 AM IST

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து வரும் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவுக்கு, அருணோதயா சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்ய கோரிக்கை
நீட் தேர்வு ரத்து செய்ய கோரிக்கை

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அருணோதயா சங்கங்களின் கூட்டமைப்பு, நீதிபதி ஏ.கே.ராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், 'கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வுகளை உற்று நோக்கும்போது, அதன் முதல் 50 பட்டியல் பட்டியலின, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை என்பதை கவனிக்க முடிகிறது. நீட் தேர்வு முழுக்க முழுக்க வசதியானவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.

தேர்வு முடிவு என்பது மாணவர்களின் அறிவுத்திறனை ஒட்டி இருக்க வேண்டும். மாணவர்களின் வசதி வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கை.

கேள்விக்குறியாகும் இடஒதுக்கீடு

இதன் அடிப்படையில் தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும் நீட் தேர்வு முறையால், இட ஒதுக்கீடு முறை கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே, சமூக நீதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தேர்வு முறையை செய்ய வேண்டும்.

ஏழை எளிய, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள எங்களைப் போன்ற மாணவ மாணவியர் சம வாய்ப்பு பெற தடையாக உள்ள நீட் தேர்வு முறையை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் நீக்க வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வை உடனடியாக தடை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி - ஏ.கே.ராஜன் சந்திப்பில் நடந்த ருசிகரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.