பள்ளிக் கல்வித் துறை சார்பாக வகுப்பறை நோக்கின் என்ற மொபைல் அப்ளிகேஷன் தொடக்க நிகழ்ச்சி சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மொபைல் அப்ளிகேஷன் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
- தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது.
இதை மீறிச் செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும். பள்ளிகள் திறப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆலோசித்து முடிவை அறிவிக்கும்.
கரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைப்பு செய்யப்படுமா என்பது குறித்தும் அது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு பரிந்துரையின்படி அரசு முடிவை எடுக்கும்.
தமிழ்நாடு முழுவதும் 201 மையங்களில் 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சுமுகமாக நடைபெற்றுவருகின்றன.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான குழுவின் தலைவருக்கான பணியிடம் மிக விரைவில் பூர்த்திசெய்யப்படும். அதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் தொலைபேசி வாயிலாகச் செய்தியாளர்களிடம், "தனியார் பள்ளி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துதான் வகுப்புகளை நடத்தக் கூடாது.
- தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது" எனக் கூறினார்.
முதலில், 'ஆன்லைனில் வகுப்புகளை நடத்தக்கூடாது' என்று கூறிவிட்டு சில மணி நேரத்தில், 'ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதைத் தடுக்க முடியாது' என்று அமைச்சர் பேசியிருக்கிறார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!