ETV Bharat / state

திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு! - திருமாவளவன், சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

thirumavalavan, siddarth
thirumavalavan, siddarth
author img

By

Published : Dec 20, 2019, 12:28 PM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையை எச்சரித்தும் அனுமதியின்றி, போராட்டத்தில் ஈடுபட்டதால் முகமது கவுஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சாஸ்திரிபவன் மத்திய அலுவலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் மாணவர் கழகத்தைச் சேர்ந்த 37 பேர் மீது 151, 143, 341, 41 பிரிவு 6 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டம்: 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

Intro:Body:குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் சித்தார்த் உட்பட 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது வழக்கு பதிவு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திப் ஈடுபட்டனர். இவர்களுடன் விடுதலை இந்திய தவ்ஹீத் கூட்டமைப்பு, சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட முகமது கவுஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அனுமதி இன்றி காவல்துறை எச்சரித்தும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 54 அமைப்புகளைச் சேர்ந்த 600பேர் மீது 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல் சென்னை சாஸ்திரி பவன் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் மாணவர் கழகத்தைச் சேர்ந்த 37 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சாஸ்திரிபவன் மத்திய அலுவலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்ட பெரியார் மாணவர் கழகத்தைச் சேர்ந்த 37 பேர் மீது 151, 143, 341, 41 பிரிவு 6 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.