ஐக்கிய அரபு நாடுகளில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததால், அந்நாட்டு அரசால் பிடித்து காவலில் வைக்கப்பட்டிருந்த 100 இந்தியா்கள், தனி விமானத்தில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திலிருந்து ஆவடி விமானப்படை நிலையம் கொண்டுச் செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்தியா்கள் பலா் முறையான பாஸ்போா்ட், ஆவணங்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கியிருந்ததை அந்நாட்டு அரசு கண்டுபிடித்தது. பின்னர், அவா்கள் அனைவரையும் பிடித்து அங்கு காவலில் வைக்கப்பட்டனர்.
இவா்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இவா்களில் பலா் பாஸ்போா்ட்களை தவற விட்டவா்கள், சுற்றுலா விசாவில் சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டவா்கள், ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போா்ட்டில் சென்றவா்கள் என்று பல தரப்பினா் உள்ளனா். இவா்கள் அனைவரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று ஐக்கிய அரபு அரசுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு கோரியது.
அதன்படி ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 100 பேர் இந்தியா திரும்பினர்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து சிங்கப்பூர், வங்காளதேசத்திற்கு சிறப்பு விமானங்கள்!