சென்னையின் கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி வழியாக தி. நகர் செல்லும் மாநகரப் பேருந்துகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் வேகமாகவும் செல்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் இந்தச் செயலால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
![விபத்து ஏற்படுத்திய பேருந்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4598215_bus.jpg)
இந்நிலையில், தற்போது வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள சதாசிவம் நகரில் வேகமாக வந்த அரசுப் பேருந்து, ஆட்டோவின் மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : லாரியின் மீது மோதிய அரசு பேருந்து மூவர் பரிதாப பலி!