ETV Bharat / state

கரோனாவால் பேருந்து நடத்துநர் உயிரிழப்பு!

சென்னை: ஆவடியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆவடி
ஆவடி
author img

By

Published : Jun 18, 2020, 6:31 PM IST

ஆவடி மாநகராட்சி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, மாநகராட்சிக்கு உள்பட்ட ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கோவில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினசரி 20 வரை உயர்ந்துவருகிறது.

இந்நிலையில், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மாநகர போக்குவரத்து கழக நடத்துநர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் கரோனாவுக்கு சாதகமாக வந்ததையடுத்து அவருக்கு தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன் 18) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி நடத்துநர் இறந்தார். இதனால் ஆவடி மாநகராட்சியில் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்க 17ஆக உயர்ந்தது. ஆவடி மாநகராட்சியில் கரோனா தொற்று நோயால் 420க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 221 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 180க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.