ETV Bharat / state

சென்னையில் ஓய்வு பெற்ற பேருந்து நடத்துனர் தற்கொலை முயற்சி!

சென்னை: ஆவடி அருகே ஓய்வூதியத்தை திடீரென்று வங்கி முடக்கியதால், ஓய்வு பெற்ற பேருந்து நடத்துனர், நேற்று (பிப்.25) ஆவடி பனிமனையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பேருந்து நடத்துனர்.

author img

By

Published : Feb 26, 2021, 11:42 AM IST

சென்னை மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், திருவள்ளுவர் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (65). இவர், ஆவடி பணிமனையில் போக்குவரத்து நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இந்நிலையில், நேற்று (பிப்.25) காலை தங்கமணி ஆவடி பணிமனையில் போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர், அவர் நேற்று (பிப்.25) மாலை 4 மணி அளவில், பணிமனை வளாகத்திலுள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த சக ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரும், கோபுரத்தில் ஏறி அவரை மீட்டுள்ளனர். இதில், மயக்கம் அடைந்த தங்கமணியை, காவல் துறையினர், ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், அவர் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இது குறித்து ஆவடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தங்கமணி கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இவர் தனது மகன் ராகுலின் பொறியியல் படிப்பிற்காக, திருமுல்லைவாயலில் உள்ள ஒரு வங்கியில் 2009ஆம் ஆண்டு ரூ.2.25 லட்சம் பணத்தை கல்வி கடனாக பெற்றுள்ளார். அதனை, அவர் முறையாக செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் வங்கி நிர்வாகம், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் என கூறியுள்ளது. மேலும், தங்கமணியின் வங்கி கணக்கிலிருந்து கடந்த இரு மாதங்களாக ஓய்வூதியத்தை, வங்கி முடக்கி வைத்துள்ளது. இதனையடுத்து, அவர் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், நிர்வாகம் தங்கமணியிடம் நீங்கள் கல்விக்கடனை முழுமையாக செலுத்தவில்லை என கூறியுள்ளது.

மேலும், தங்கமணி நேற்றும் திருமுல்லைவாயல் வங்கிக்குச் சென்று மீண்டும் முறையிட்டுள்ளார். அப்போது, வங்கி அலுவலர்கள் கல்வி கடன் பாக்கி உள்ளது என கூறியதுடன், முடங்கிய ஓய்வூதியத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், நேற்று (பிப்.25) தங்கமணி ஆவடி பணிமனையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, அங்குள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.