சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி விடுதி சாலையில் வசித்து வருபவர் பெலிசிட்டி சல்தன்யா பே (70). இவரது மகன் ஆரன் அமெரிக்காவில் பணிப்புரிந்து வருவதால் வீட்டில் தனியாக வசித்துவந்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு தனது மகனைச் சந்திப்பதற்காக பெலிசிட்டி அமெரிக்காவிற்கு சென்றார். அப்போது வீட்டை பார்த்து கொள்வதற்காக தெரிந்த நபரான சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவரை தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணன் நேற்றிரவு (பிப்.2) வீட்டில் வழக்கம் போல தூங்கிவிட்டு, இன்று (பிப்.3) காலை எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த லேப்டாப், டிவி, மதுபானம், 7 சவரன் தங்க நகைகள் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை!