வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டில் மேலும் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் மையம் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:‘புரெவி புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ - அமைச்சர் உதயகுமார்