பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்காக அட்டகாசமான ரீசார்ஜ் ஆஃபர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் தங்களது தற்போதைய செயலில் உள்ள பிளான்கள் காலாவதியாகும் வரை காத்திருக்காமல், முன்பே அதே பிரிவின் அடிப்படையில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள பிளான்கள் காலாவதியான பிறகு, சந்தாதாரரால் முன்கூட்டியே செய்யப்பட்ட ரீசார்ஜ் தானாகவே செயல்படுத்தப்படும், மேலும் இது குறுஞ்செய்தி வழியாக சந்தாதாரருக்கு தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரீசார்ஜ் வசதியானது ரூ.97, ரூ.98, ரூ.118, ரூ.187, ரூ.247, ரூ.319, ரூ.399, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.699, ரூ.997, ரூ.1,699, மற்றும் ரூ.1,999 ஆகிய பிளான்களின் சந்தாதாரர்களுக்கு மட்டும் பொருந்தும்.
பிஎஸ்என்எல் எப்போதும் அதன் சந்தாதாரர்களுக்கு மலிவு விலையில் சிறந்த சேவைகளை வழங்கத் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.