இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் ஆய்வு போன்றவற்றிற்காக நேற்று 50ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த சாதனை இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி, அவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும்.
இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்பல சாதனைகள் படைத்து, நம் தாய்திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட இந்த தருணத்தில் என் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன்" என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குரூப் 1 நேர்காணல் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி