ETV Bharat / state

பாலியல் தொழில் செய்துவந்த புரோக்கர் கைது - chennai crime news

சென்னையில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

broker-arrested-for-prostitution-in-chennai

author img

By

Published : Feb 1, 2022, 8:24 AM IST

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல உணவகம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்களில் வெளிமாநில பெண்களை வைத்து சமூக வலைதளம் மூலம் தொடர்புகொண்டு பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவியுடன் அவர்களுடைய சமூக வலைதளக் கணக்கை கண்காணித்து அதைப் பயன்படுத்துபவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

அதனடிப்படையில் சென்னை அருகேயுள்ள தாழம்பூர் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி ரஞ்சித் (எ) ஜோஸ்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி

அவரிடம் நடத்திய விசாரணையில் ரஞ்சித், சிவகுமார், பிரதீப் ராஜ், ஜோஸ்ராய் உள்ளிட்ட பல பெயர்களில் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி அதன் மூலம் வெளிமாநிலப் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் காவலர்கள் சேர்த்தனர். ரஞ்சித் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுக, பாஜக அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.