ETV Bharat / state

கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு வளர்ப்புத் தொகை அதிகரிப்பு - கோழிக்கறி

கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு குறைந்தபட்ச வளர்ப்புத்தொகையான ரூ.3.50லிருந்து ரூ.6ஆக உயர்த்தி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை
உடுமலை
author img

By

Published : Nov 17, 2020, 11:16 PM IST

தமிழ்நாட்டிலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை உயர்த்துதல், வளர்ப்புக்கூலி கணக்கிடும் முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி
தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை. கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை
செயலாளர் கோபால் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு
பண்ணையாளர்களுக்கு குறைந்தபட்ச வளர்ப்புத்தொகையான ரூ.3.50லிருந்து ரூ.6ஆக
உயர்த்தி வழங்கவும் மற்றும் 2000-க்கும் குறைவாக கறிக்கோழிகள் வளர்க்கும் சிறுபண்ணையாளர்களுக்கு கோழி ஒன்றுக்கு ரூ.1(ரூபாய் ஒன்று) வீதம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கவும் இருதரப்பினராலும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளப்பட்டது.

கறிக்கோழி வளர்ப்பதற்கான ஒப்பந்தம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய
முறையில் தமிழில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படவும், இருதரப்பினரும் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்த பத்திரத்தின் நகல் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவும், தீர்மானிக்கப்பட்டு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

கறிக்கோழி பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்த விலையில்
கிடைக்கப்பெறும் உமி, கடலைப்பொட்டு, மரத்தூள் போன்றவற்றை கோழிகளின் படுக்கை
பொருட்களாக பயன்படுத்திக் கொள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களால்
ஒப்புக்கொள்ளப்பட்டது.

நிறுவனங்கள் கொடுக்கும் தீவனம் மற்றும் மருந்துகளை தவிர மற்ற பொருட்களை கறிக்கோழி வளர்ப்புப் பண்ணையாளர்கள் கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமல் பண்ணையில் பயன்படுத்த கூடாது எனவும்,

கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் தரமான கோழிக்குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் வழங்க
வேண்டும் என்றும், பண்ணையாளர்களின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு
தொகுப்பிற்கும் முறையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.