ETV Bharat / state

முடி கருமையா, அடர்த்தியா வளரனுமா.. இந்த எண்ணெய்யை ட்ரை பண்ணி பாருங்க!

Bringharaj hair oil benefits in tamil: பல விதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கரிசலாங்கண்ணி எண்ணெய் முடியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

முடி வளர்ச்சியை தூண்டுகிறது
பிரிங்ராஜ் எண்ணெய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 3:00 PM IST

சென்னை: பெண்களுக்கு உள்ள பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்தல். இவற்றை சரிசெய்வதற்கு அவர்கள் நாள்தோறும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அழகான, ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது.

பொதுவாக ஆரோக்கியமான கூந்தல் இருந்தால் நமக்குள் ஒரு தன்நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு பளபளப்பான கூந்தலைப் பெற ஏங்காத பெண்கள் கிடையாது. ஆனால், அவற்றை பெற நம் அதிகம் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூந்தலை வளர்க்க பல நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.

அந்த வகையில், கூந்தல் பாதுகாப்பில் ஆயுர்வேத மருத்துவத்தில் பிரிங்ராஜ் எண்ணெய் பிரபலமான ஒன்றாகும். கரிசலாங்கண்ணி தாவரம் தான் வடமொழியில் பிருங்கராஜ் என்று அழைக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணி என்றால் என்ன?

கரிசலாங்கண்ணி என்பது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பிரிங்ராஜ் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும், பொடுகுத் தொல்லையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மேலும், வழுக்கை, நரை முடி மற்றும் முடியில் பிளவு போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது முடியின் தரத்தை மேம்படுத்தி, அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளர்வதற்கு வழிவகுக்கிறது. இவை காப்ஸ்யூல், பவுடர் மற்றும் எண்ணெய் வடிவில் கிடைக்கிறது.

முடி வளர்ச்சியை தூண்டுகிறது

கரிசலாங்கண்ணி எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடியின் வேர்கால்களை தூண்டி முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. முடி உதிர்தலையும் குறைக்கிறது. மேலும், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் முடி உதிர்வைத் தடுக்க உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொடுகு பிரச்சனைகள் நீங்குவதற்கு

கரிசலாங்கண்ணி எண்ணெய் குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். அவை உங்கள் உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமின்றி, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, பொடுகு, முடி வறட்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து முடியை பாதுகாக்கிறது.

கருமையான கூந்தல்

கரிசலாங்கண்ணி எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் அவை முடியின் நிறத்தை மேம்படுத்தி தலைமுடியை கருப்பாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இந்த எண்ணெயில் நிறமிகள் இருப்பதால் முடி நரைப்பதை தாமதப்படுத்த உதவுகிறது.

முடியை மென்மையாக்குகிறது

கரிசலாங்கண்ணி எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது கூந்தலுக்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்கி, மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்க வழிவகுக்கிறது.

மன அழுத்தம்

பல வித முடி பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் இந்த எண்ணெய்யின் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. பல விதமான மன பிரச்சனைகளால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. எனவே, இவை மன அழுத்தத்தை குறைத்து முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

கரிசலாங்கண்ணி எண்ணெய்யின் விளைவுகள்

அனைத்து மூலிகைகள் போன்று பிரிங்ராஜ் எண்ணெய் சிலருக்கு தோல் எரிச்சல், ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வாஷிங் மிஷினை சுத்தம் செய்வது எப்படி? அவசியமாக தெரிந்து கொள்ளுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.