ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது - கொக்கிப் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை!

சென்னை: இருசக்கர வாகன ஓட்டியிடம் மூன்றாயிரம் லஞ்சம் பெற்ற குற்றப்பிரிவு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாதேவி
author img

By

Published : Jun 11, 2019, 2:52 PM IST

சென்னை ஆதம்பாக்கத்தில் வாகனச் சோதனையின்போது குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாதேவி சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.

இதையடுத்து உரிய ஆவணங்களைக் எடுத்துச்சென்று கண்ணன் வாகனத்தைக் கேட்டபோது, மூன்று ஆயிரம் பணம் கொடுத்தால் அதை திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.

கையூட்டு கொடுக்க விரும்பாத கண்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதேபோல் பூமாதேவி மீது பல புகார்கள் வந்த வண்ணமாக இருந்ததன் காரணத்தால் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை காண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 15 அலவலர்கள் நேரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ரூபாய் மூன்றாயிரம் ரசாயனம் தடவப்பட்ட நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள், கண்ணனிடம் கொடுத்து ஆய்வாளரிடம் கொடுக்கக் கூறியுள்ளனர்.

அவர் பணத்தை பூமாதேவியிடம் கொடுத்தபோது சுற்றி வளைத்த காவலர்கள் பூமா தேவியை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அவரிடம் வைத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

*சென்னையில் 3000 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறி ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரானை... *

சென்னை ஆதம்பாக்கத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் வழக்கு பதிவு செய்யமால் இருக்கவும் ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாதேவி 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாதாக புகார் மனுவின் எதிர் தரப்பு நபர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

இது போன்று பூமாதேவி மீது பல புகார்கள் வந்த வண்ணமாக இருந்ததன் காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் 15 அதிகாரிகள் நேரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரூபாய் 3 ஆயிரம் ரசாயணம் தடவப்பட்ட நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புகார் அளித்தவரிடம் கொடுத்து ஆய்வாளரிடம் கொடுக்க கூறியுள்ளனர். 

மேலும் இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரசயாணம் தடவப்பட்ட பணம் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதை பணத்தின் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலே குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாதேவியிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.