இன்றைய காலகட்டத்தில் நாகரிக வளர்ச்சி, வேலை பளு உள்ளிட்ட மன அழுத்தம் நிறைந்த ஐடி பணிகள் மற்றும் அழகு குறைந்துவிடும் என்ற காரணத்தால் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவது இல்லை. இதனால் நாளுக்கு நாள் தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கணிசமாக குறைந்து வருகிறது.
இதனால் தாய்ப்பால் புகட்டுவதின் அவசியம் குறித்து பெண்களுக்கு உணர்த்தும் வகையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு பி.பி.என்.ஐ அமைப்பின் இந்திய இயக்குனர் அருண்குமார், தாய்ப்பால் புகட்டுதல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கிருஷ்ணன் உட்பட 14 மருத்துவ நிபுணர்கள் இது குறித்து விளக்கினர். இதில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தமிழகத்தில் 100-க்கு 52பெண்கள் தாய்ப்பால் சரிவர புகட்டுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் புகட்டுவதில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பத்தாவது இடத்தில் உள்ளது எனத்தெரிவித்தனர்.
அதேபோல் தாய்ப்பால் சுரக்கவில்லை என சொல்லும் பெண்களுக்கு ஒரு சில மருத்துவர்கள் பால் பவுடர்களை பரிந்துரைகின்றனர். இது அரசு சட்டத்திற்கு எதிரானது என்றனர்.மேலும் தாய்ப்பால் 6 மாதம் வரை நிச்சயம் அளிக்கவேண்டும். இது பிற்காலத்தில் இருதய நோய்,சர்க்கரை வியாதி, மாரடைப்பு ஏற்படுவதை வெகுவாக குறைகின்றன என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிக்க: டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி பலி