ETV Bharat / state

தமிழகத்தில் ஆண்டுக்கு 4% அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்.. மருத்துவர் சுரேஷ் குமார் கூறும் ஆலோசனைகள் என்ன? - chennai news

Symptoms of Breast Cancer: தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4 சதவிகிதம் அதிகரித்து வருவதாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 4 சதவிகிதம் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 9:10 PM IST

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார்

சென்னை: தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோயால், இளம் பெண்கள் உட்பட பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. முன்பு 1 லட்சம் பேரில் 16 பேர் என்ற நிலையில் இருந்து உயர்ந்து, தற்போது 1 லட்சம் பேரில் 25 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது என சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தற்பொழுது அதிகளவில் புற்றுநோய் பெண்களுக்கு கண்டறியப்படுகிறது.

குறிப்பாக, முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிக அளவில் கண்டறியப்படுகிறது. மார்பக புற்றுநோய், பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கும். இந்தியாவை பொறுத்தவரையில், 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொள்கையில், அதில் 25 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.

10 வருடங்களுக்கு முன்னாள், 1 லட்சம் பெண்களில் 16 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது மார்பக புற்றுநோய் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொண்டால், அதில் 37 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரத் தொடங்கும். 60 வயதுக்கு மேல், 8 பேரில் 1 பெண்ணுக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக அதிகளவில் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

இதனால் ஆரம்ப நிலையிலேயே இந்த மார்பக புற்றுநோயைக் கண்டறிய முடிகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மேமோகிராம் பரிசோதனை ஆண்டிற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.

புற்றுநோயில் பொதுவாக 4 நிலை உள்ளது. முதல் நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அறுவைசிகிச்சை செய்து 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும். அந்த புற்றுநோய் 2-ஆம் நிலையில் இருந்தால் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்து 40 சதவிகிதம் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம்.

மார்பக புற்று நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் இருத்தல், கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல், கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, 30 வயதுக்கு மேல் முதல் பிரசவம் போன்றவற்றால் மார்பக புற்று நோய் ஏற்படலாம்.

குரோமோசோம்களில் BRCA 1 மற்றும் 2 என்ற மரபணுக்கள் தோன்றுவதும்கூட மார்பக புற்றுநோயை உருவாக்கலாம். இதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும். ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு ட்யூமர் போர்டு (tumor board) உள்ளது.

இதில் பரிசோதனை செய்து புற்றுநோய் இருப்பது கண்டறிந்த பிறகு, 10 நாட்களுக்குள் சிகிச்சை தொடங்கப்படும். இங்கு வருடத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 7 முதல் 8 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

மார்பக புற்றுநோய் அறிகுறிகளாக, வலியில்லாத மார்பில் கட்டி அல்லது வீக்கம், மார்பக தோலில் அதீத சுருக்கம், மார்பக காம்பு உள் வாங்குதல், அக்குளில் வழியில்லாத கட்டி, மார்பகத்தில் புண் ஏற்பட்டு ரத்த கசிவு ஏற்படுவது உள்ளிட்டவை அறியப்படுகிறது. புற்று நோய் வராமல் தடுப்பதற்கு சரியான சத்துள்ள உணவை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்களுக்குப் போடும் மேக்கப்பால் கண் பார்வைக்கு ஆபத்தா? என்ன செய்யலாம்.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.