சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் எட்டு வீடுகள் கொண்ட டைமண்ட் குடியிருப்பில் பொதுப்பாதையில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டன. தண்ணீர் வராததால் பிளைவுட், கான்கிரீட் போட்டு மேலோட்டமாக மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணப்பாறை அருகே மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தனியார் குடியிருப்பில் முறையாக மூடப்படாமல் இருக்கும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்பில் வசிக்கும் ஜி.ஜெயஸ்ரீ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரைப் பயன்படுத்தும் பொதுவழியில், முறையாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடக் கோரி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, செம்பியம் காவல் துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுதொடர்பாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க:
குறுக்கே வந்த நாய்கள்... கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ: பெண் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்