சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளர் தெரியாத நபர் ஒருவர் இன்று மாலை 4 மணிக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் உடனடியாக நீலாங்கரை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல் துறையினர் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் காவல் துறையினர் சோதனை செய்தனர்.
இதில், பாண்டிசேரியில் கடைசியாக செல்போன் அணைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அந்த நபரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "இப்போ வீடே சிறை ஆயிடுச்சி"- 'மனிதன்' ஃபோட்டோசூட் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி