சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதலமைச்சர் இல்லம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் குறிப்பாக தான் முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே நின்று பேசுவதாகவும் கூறி, இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் உடனடியாக அபிராமபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களுடன் முதலமைச்சர் இல்லம், தலைமைச் செயலகத்தில் சோதனை செய்தனர்.
சோதனையில் வந்த தகவல் புரளி எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து செல்போன் எண்ணை வைத்து, அந்த அடையாளம் தெரியாத நபரை அபிராமபுரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!