சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர், ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று மோப்ப நாயுடன் சோதனை செய்தனர்.
இந்த சோதனைக்குப் பின்னர் ரஜினி வீட்டில் வெடுகுண்டு ஏதுமில்லை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் எண்ணை வைத்து தேடி வருகின்றனர். மேலும், இதபோன்று ஏற்கனவே ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீண்டும் மிரட்டியது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்' - சிரஞ்சீவி சர்ஜா மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!