ETV Bharat / state

தேனாம்பேட்டை கார் ஷோரூம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு - இருவர் தப்பியோட்டம - latest tamil news

சென்னை: தேனாம்பேட்டை அருகே கார் ஷோரூம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bomb blast at Thenampettai car showroom
Bomb blast at Thenampettai car showroom
author img

By

Published : Mar 3, 2020, 6:03 PM IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கார் ஷோரூம் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் இன்று மாலை நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகில் நடைபெற்றுள்ளதால் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, அந்நபர்கள் யாரென்று விசாரித்துவருகின்றனர்.

இது தொடர்பாக ஷோரூம் ஊழியர்கள் பேசுகையில், “கார் ஷோரூம் முன்பு திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அதோடு கட்டடங்களும் அதிர்ந்தன. இதையடுத்து ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்து பார்த்தோம். யார் இதைச் செய்தார்கள்?, ஏன் செய்தார்கள்? என்று ஏதும் தெரியவில்லை. ஷோரூம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று அதிர்ச்சியுடன் கூறினர்.

வெடிகுண்டு வெடித்த சிசிடிவி காட்சி

இதுதொடர்பாக காவல் துறை தரப்பு தெரிவிக்கையில், சிசிடிவி காட்சிகள் மூலம் குண்டு வீசிய நபர்கள் யார் என்று அடையாளம் காண முயற்சி செய்துவருவதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெராக்ஸ் எடுக்க வந்த இடத்தில் செல்ஃபோனை திருடிய இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.