சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர ரத்த பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் குறைந்த கட்டணத்தில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன.
குறிப்பாக கிராமப்புறங்களில் செயல்படும் சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் சர்க்கரை, ஹீமோகுளோபின், யூரியா உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளை தரமான முறையில் செய்துவருகிறது. இவை கார்ப்பரேட் நிறுவனங்களால் பாதிப்படைந்துவருகிறது.
இந்த மையங்களை தரம் உயர்த்துவது, மீட்பது தொடர்பாக தேசிய தர அங்கீகார நிறுவனத்துடன் இணைந்து கருத்தரங்கம் நடத்தப்பட்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டுவரவுள்ள சுகாதார உரிமைக்கான மசோதாவை வரவேற்கிறோம்.
இதில் மருத்துவ பணியாளர்களின் உரிமைகளும் சிறிய மருத்துவ நிறுவனம் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற மசோதாவை ஒன்றிய அரசும் கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் புதிய டாஸ்மாக் திறப்பு: எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த கவுன்சிலர்!