சென்னை: இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிரதிநிதி சிங்காரவேலன், 'கடந்த 10 வருட காலமாக நாங்கள் நடத்திய பல கட்டப் போராட்டங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் எங்களுக்கு கிடைத்த பாடில்லை. தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே நியமனத் தேர்வு எழுதவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடிமான TET தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். ஆனால், 10 ஆண்டுகள் கழித்து நியமனத் தேர்வு எழுதவேண்டும் என்றால், இது எப்படி சாத்தியமாகும். எங்கள் துறை சார்ந்த அமைச்சரும் செயலாளரும், எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை கடந்த 2012 முதல் இரட்டிப்பு ஆக்கப்படவில்லை. இதனால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால், ஆண்டு கல்வி ஊக்கத்தொகையை உயர்த்தி தரவேண்டுமென்றும்; உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தற்போது அறிவித்துள்ள தற்காலிக பணியிடங்களான 1,865 இடங்களைத்தான் அறிவித்துள்ளார்.
அந்தப் பணியிடங்கள் முழுவதும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களை அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை நேர்காணல் மூலம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
புறக்கணிப்பு : எவ்வளவுதான் எங்களுக்கு தகுதி இருந்தாலும், நேர்காணலில் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். ஆகையால், இந்த நேர்காணலை ரத்து செய்து, தகுதியின் அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள 160 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 23 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அனைத்து பணிகளையும் உடனடியாக நிரப்பவேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வழங்கிட வேண்டும்.
சிறப்பு டிஆர்பி மற்றும் சிறப்பு டிஎன்பிசி இந்த ஆண்டு தேர்வுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நடத்த வேண்டும். அதன்படி, டிஎன்பிஎஸ்சியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது.
அதை உடனடியாக நிரப்பி தரவேண்டும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்யாமல் எங்களை அழைத்தும் பேசாமல் இருந்தால் எங்கள் இறுதி மூச்சு வரை போராட்டம் தொடரும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீதியில் படித்த போட்டி தேர்வர்களுக்காக நவீன சென்டர்.. நெல்லை ஆட்சியர் அசத்தல்!