ETV Bharat / state

அண்ணாமலையின் பேச்சு சரியில்லை: பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் கண்டனம்! - சென்னை செய்தி

யூடியூபர்ஸ் குறித்து அண்ணாமலை பேசியது தவறு, யூடியூபர்களுக்கு என்று தனியாக சங்கம் இல்லாததால் இப்படி பேசுகிறார்கள், என பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

பிளாக் ஷீப் விக்னேஷ்
பிளாக் ஷீப் விக்னேஷ்
author img

By

Published : Jan 7, 2023, 10:52 PM IST

பிளாக் ஷீப் விக்னேஷ் அளித்த பேட்டி

பிரபல யூடியூப் சேனலாக விளங்கி வந்த பிளாக் ஷீப் நிறுவனம், அடுத்த கட்டமாக பிளாக் ஷீப் தொலைக்காட்சி மூலம், டிவி துறையில் கால் தடம் பதிக்க உள்ளது. தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் வைகைப்புயல் வடிவேலு தான் பிளாக் ஷீப் தொலைக்காட்சியின் பிரதிநிதியாக (அம்பாசிடராக) உள்ளார்.

முதற்கட்டமாக அதற்கான விளம்பர நிகழ்வை இன்று ஆரம்பித்திருக்கிறது. சென்னை முதல் கோயமுத்தூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி முழுவதும், பிளாக் ஷீப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த ரயிலை 90களில் தொலைக்காட்சியின் வாயிலாகப் பொதுமக்களைக் கவர்ந்த தொகுப்பாளர்கள் அர்ச்சனா, விஜய் ஆதிராஜ், விஜய் சாரதி, டாப் 10 சுரேஷ், ஜேம்ஸ் வசந்தன், மெட்ரோ ப்ரியா மற்றும் பலர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

பின்னர் பேட்டியளித்த விக்னேஷ் காந்த், “எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. யூடியூபர்ஸ் குறித்து பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியது மிகவும் தவறு. யூடியூபர்களுக்கு என்று தனியாகச் சங்கம் இல்லாததால் இப்படிப் பேசுகிறார்கள். பெரிய திரை, சின்னதிரைக்கு எல்லாம் சங்கம் என்று ஒன்று உள்ளது.

யூடியூப்க்கு இல்லை என்பதால் அப்படி கேள்வி கேட்கிறார்கள். சங்கம் இல்லாத பட்சத்தில் அவர் கேட்கும் கேள்வி சரிதான். ஆனால் சங்கம் உருவாக வேண்டும். மத்தபடி கேள்வி கேட்பது என்பது குடிமகனாக எனது கடமை. அவர் சொன்னது ஒரு யூடியூபராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.

இதையும் படிங்க: 'பாக்யராஜ் எனது சிஷ்யன் என்பதில் எனக்கு தான் பெருமை’ - இயக்குநர் இமயம் பாரதிராஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.