சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், "தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் வேல் யாத்திரை நேற்று தொடங்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாநில தலைவரும், பல நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில், அரசியல் கட்சிகளின் கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தான் இந்த யாத்திரையை தொடங்கியுள்ளோம்.
நாளை (நவ.8) மீண்டும் மாநில தலைவர் எல்.முருகன் யாத்திரையை தொடங்கவுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இந்த யாத்திரையை நடைபெறுவதற்கு கட்டுப்பாடு விதிமுறைகளை கொடுக்க வேண்டும்" என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் : இஓஎஸ்-01 செயற்கைகோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ