சென்னை: மந்தைவெளியில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பாரதியஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "கரோனா காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது. பல நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறது. உளுந்தூர்பேட்டையில் நாடக காதலால் கொல்லப்பட்ட சரஸ்வதியின் குடும்பத்திற்கு பாரதி ஜனதா கட்சி சார்பாக சென்று ஆறுதல் கூறினேன். இந்த விவகாரத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினருக்கும் அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறேன் என்றார்.
இந்த ரத்த தான நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மகளிர் ரத்த தானம் செய்தனர்.