புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாட்டில் பல அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் ஒட்டுக் கேட்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு இந்தியாவுடைய என்.ஐ.சி சர்வர்களை பயன்படுத்தாததே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசு சம்பந்தமான செய்திகளையும், ரகசிய உத்தரவுகளைகளையும் அரசு அலுவலர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
காலத்தில் அழியாத திருக்குறள் நூலை பிரதமர் மோடி தாய்லாந்தில் வெளியிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது கொச்சைத் தனமான அரசியல் என விமர்சித்துள்ளார். திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், திருவள்ளுவரை ஆர்எஸ்எஸ் ஆக்க பாஜக முயற்சி செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: புதுச்சேரி அரசு ஆலோசனை