ETV Bharat / state

அரியலூர் மாணவி தற்கொலை, சிபிஐ விசாரணை தேவை- கரு. நாகராஜன்! - அரியலூர் மாணவி தற்கொலை சம்பவம்

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - கரு.நாகராஜன்

author img

By

Published : Jan 21, 2022, 7:36 PM IST

சென்னை: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, பாஜக மாநில பொது செயலாளர் கரு நாகராஜன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேதாசுப்பிரமணியம் ஆகியோர் வருகின்ற மாநகராட்சி தேர்தல் குறித்து ஆலோசனைகளை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன், “அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தனது விடுதியில் அறைகளை சுத்தம் செய்யும்படியும், கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த மாணவியின் இறப்பு குறித்து இது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உடனடியாக வழக்கினை மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றவேண்டும். லாவண்யாவின் மரணத்துக்கு நீதிக் கோரி சென்னையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இறந்து போன மாணவி வேறு மதமாக இருந்திருந்தால், முதலமைச்சர் வருத்தப்பட்டு இருப்பார். அவர் இந்து மதமாக இருப்பதால் முதலமைச்சருக்கு கவலை கிடையாது. மாணவியின் தற்கொலை விவகாரத்தை மறைக்கதான் முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு குறித்து பேசிய கரு. நாகராஜன், “இந்த விவகாரத்தில் மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராக உள்ளது” என்றும் கூறினார்.

இதையும் படிங்க:பள்ளி மாணவி தற்கொலை - கட்டாய மதமாற்றம் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.