ETV Bharat / state

'அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா? - காலம் தான் பதில் சொல்லும், நான் ஜோசியம் சொல்ல முடியாது'

author img

By

Published : Jan 5, 2022, 8:19 PM IST

1990களில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் என் பங்கு அதிகம் இருந்தது. ஆனால், வருங்காலத்தில் திமுகவுடன் கூட்டணியா என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும். நான் ஜோசியம் சொல்ல முடியாது. அதே வேளையில் தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா
பொன். ராதாகிருஷ்ணன், அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பாஜக சார்பாக சென்னை மாநகராட்சியில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த மாதம் அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 652 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மாநில பாஜக தேர்தல் குழுத் தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஜனவரி.5) முதல் கமலாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.

காலம் தான் பதில் சொல்லும்
பொன். ராதாகிருஷ்ணன்

முதல்கட்டமாக ஆயிரம் விளக்கு, துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள இடங்களுக்கான நேர்காணல் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வட்டங்களில் நேர்காணல் நடைபெறுகிறது.

ஆளுநர் அப்படி இருக்க மாட்டார்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "இன்று முதல் மூன்று நாள் சென்னையில் நேர்காணல் நடைபெறும், மாநில தேர்தல் குழு எடுப்பதே இறுதியான முடிவு" என்றார். ஆளுநர் உரை குறித்துப் பேசிய அவர், "அரசு கொடுக்கும் விவரங்களைச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். தமிழ்நாடு அரசு நினைப்பதைத் தான் ஆளுநர் பேசுகிறாரா என்ற கேள்விக்கு, சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையாக ஆளுநர் இருக்க மாட்டார்.

தமிழ் மாணவர்கள் விரும்பும் மொழிகளைப் படிக்க வசதி செய்தி கொடுக்க வேண்டியது அரசின் கடமை . இல்லை என்றால் அது மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல். தமிழ்நாடு மாணவர்களை ஒவ்வொரு முறையும், நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கி விடுவோம் என ஏமாற்றாதீர்கள். கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தியதில் பல மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்நாடும் சிறப்பாகச் செயல்பட்டது'' என்றார்.

அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா
அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா

பாஜக அதிமுக கூட்டணி

பாஜக - திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, "காலம் தான் பதில் சொல்லும்" எனப் பதில் அளித்தார்.

மேலும், 1990களில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் என் பங்கு அதிகம் இருந்தது. ஆனால், வருங்காலத்தில் திமுகவுடன் கூட்டணியா என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும். நான் ஜோசியம் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அதே வேளையில் தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் கூறினார்.

அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா
அறிவாலயமும் கமலாலயமும் இணையுமா

கோடநாடு விவகாரம் குறித்து, எந்த ஒரு வழக்காக இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது. இறுதியில் யார் குற்றவாளி என்பதை வெளிப்படுத்த வேண்டும். அம்மா கிளினிக் பயன்பெறக் கூடிய அளவில் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

பிரச்னை இல்லாத கூட்டணி

ஒரு அரசு கொண்டுவந்த திட்டத்தினை மொத்தமாக மாற்றக்கூடாது. அவர்களுக்கு அது பயன் பெறவில்லை என்பதைவிட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் உள்ளது என்பது தான் பிரச்னை. அதிமுகவுடன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கூட்டணி பலமாக உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக மாபெரும் சக்தியாக விளங்கி நிற்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நேர்காணலில் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல மாநகராட்சிக்கான தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் சென்னை பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைச் சபாநாயகரும் மாநிலத் துணைத் தலைவருமான வி.பி. துரைசாமி, மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஜெ., வேதா நிலையம் வழக்கு: அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.