சென்னை: திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
காலை 9.45 மணிக்கு தொடங்கும் போராட்டம் மாலை 5 மணி வரைக்கும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மட்டும் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டது.
ஆனால், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு போக்குவரத்து பிரச்சினை காரணமாக வடசென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு ஆகிய 7 பகுதிகளுக்கும் ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் போராட்டம் நடக்கிறது.
இதையும் படிங்க: LGBTQ மக்கள் குறித்து தவறாக பேசியதாக பாரிசாலன் மீது ஜெஸ்ஸி அரோரா புகார்